வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது சபையின் நடுவே அமர்ந்து திலீப் வெத்தஆராச்சி போராட்டம்!

116

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெத்தஆராச்சி வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது சபையின் நடுவே அமர்ந்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

இதனால் சபையில் பரபரப்பான சூழல் நிலவியது.
எவ்வாறாயினும், உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் பிரச்சினையை சபாநாயகர் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு எம்.பி., இருக்கைக்கு திரும்பினார் .

SHARE