GSTயையும் தாண்டி மாநில வரி பிரச்சனை தமிழ்நாட்டில் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதுதொடர்பாக திரையரங்க உரிமையாளர் திரையரங்கை மூடி 2 நாட்களாக போராட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் முதலமைச்சர் அவர்களையும் சினிமா குழுவினர் நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை வைத்தனர்.
அதேபோல் நேற்று (ஜுன் 4) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வரி குறித்து பதிவு செய்திருந்தார்.
அந்த டுவிட்டிற்கு கமல்ஹாசன் நன்றி கூறியதோடு, முதலில் ஒரு ஜென்டில்மேனாக கோரிக்கையை வைப்போம், பிறகு பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.