வரி விதிப்பே உற்பத்தித் துறை வீழ்ச்சிக்கு காரணம் : சஜித்

92

 

உற்பத்தித் துறையில் தன்னிறைவு அடையாமல் இருப்பதற்கு மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதே காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய தொகுதி ஐக்கிய இளைஞர் சக்தியின் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எமது நாடு முட்டையில் தன்னிறைவு அடையவில்லை இதற்குத் தேவையான மூலப் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதே இதற்குக் காரணம்.

கடல்சார் பொருளாதார முயற்சியாண்மை
இதனால் முட்டையைக் கூட வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அந்நியச் செலாவணியைக் கூட இழக்க நேரிட்டுள்ளது.

நாட்டில் உற்பத்தித்துறையில் ஆக்கபூர்வமான வேலைத்திட்டம் இல்லாததும், தேவையான வசதிகளுடன் தேசிய உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படாமையே இதற்குக் காரணம்.

நாட்டில் நிதி இல்லையென்றால், கடல்சார் பொருளாதார முயற்சியாண்மைகளுக்கு (Blue Economy) கூட்டுத் திட்டங்கள் மூலம் நிலையான அபிவிருத்தி இலக்குகளை எம்மால் அடையலாம்.

இவ்வாறான புதிய ஆக்கபூர்வமான தீர்வுகளே நாட்டுக்குத் தேவை“ என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

SHARE