வர்த்தகர் சியாம் கொலை வழக்கு மீள விசாரணை செய்யப்பட வேண்டும் – வாஸ் குணவர்தனவின் மனைவி

307
பம்பலப்பிட்டி பிரபல வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கினை மீளவும் விசாரணை செய்ய வேண்டுமென, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி சியாமலி பெரேரா ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை எழுத்துமூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மொஹமட் சியாமை கொலை செய்ததாக புலனாய்வுப் பிரிவினர் பொய்யான குற்றச்சாட்டு சுமத்திய காரணத்தினால், அப்பாவிகளான எனது கணவர் உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மீள் விசாரணை நடாத்துமாறு சியாமலி பெரேரா எழுத்து மூலம் கோரியுள்ளார்.

ஜனாதிபதியை நேரடியாக சந்தித்து தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து முறைப்பாடு செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் பல்வேறு ஊழல் மோசடிகள் பற்றிய விபரங்களை வாஸ் குணவர்தன, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகியிருந்தார்.

இந்த நிலையில் புலனாய்வுப் பிரிவின் சானி அபேகுணவர்தனவுடன் இணைந்து மொஹமட் சியாம் கொலை வழக்கில் எனது கணவருக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

சானி அபேகுணவர்தன என்னையும் எனது மகனையும் அச்சுறுத்தியிருந்தார். எமது குடும்பத்தையே அழிப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

சியாம் கொலை குறித்து நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட்ட போது, கொலையாளி வெளியில் இருக்க வேறு நபர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

சியாம் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் யார் கொலை செய்தார்கள் என்பது சியாமிற்கு மட்டுமே தெரியும்.

சியாமின் ஆத்மாவே தீர்ப்பளிக்கப்பட்ட நாள், அவரது தந்தையூடாக பேசியிருந்தது.

கோடிக்கணக்கான ரூபா கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பல் கிருஸாந்த என்பருடன் சியாமிற்கு முரண்பாடு காணப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்தக் கொலை இடம்பெற்றது என்பது சியாமினது உறவினர்களுக்கும் தெரியும் என சியாமலி பெரேரா நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

vass_wife-seithy-1-20130704-520

SHARE