வறட்டு இருமலை உடனடியாக குணமாக்க இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான பாட்டி வைத்தியம் இதோ!
தேவையான பொருட்கள்
- கொள்ளு – 50 கிராம்
- நல்ல மிளகு – 3 தேக்கரண்டி
- வெள்ளைப் புண்டு – 8 பல்
- சுக்கு – சிறிதளவு
- உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
கொள்ளுவை வாணலியில் போட்டு சிறு தீயில் பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து, அதனுடன் மிளகு, பூண்டு மற்றும் சுக்கு ஆகியவற்றை சேர்த்து பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து அதில் தயார் செய்து வைத்த பொடி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சோ்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின் இந்த மருந்தை சற்று மிதமான சூட்டில் ஒருநாளைக்கு ஒருவேளை என்று இரண்டு நாட்கள் தொடர்ந்து குடித்தால் வறட்டு இருமல் உடனடியாக குணமாகிவிடும்.
குறிப்பு
இந்த இருமல் மருந்தை தயாரிக்கும் போது அதிகமாக தண்ணீர் சேர்க்க கூடாது.