வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

265
மன்னார் பெரியகடை மாதர்கிராம அபிவிருத்தி சங்கத்தினருடனான கடந்த 05 ஆம் திகதிய சந்திப்பின் போது அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஏற்க்கனவே துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன், அவர்களது பகுதியில் உள்ள வறிய பாடசாலை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்குமாறு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் வேண்டிக்கொண்டதன் பிரகாரம், அமைச்சர் டெனிஸ்வரன் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க  மன்னார் மாவட்டத்தில் உள்ள கட்டிட ஒப்பந்தக்காரான பாஸ்டினி கொன்ஸ்ரக்சன் உரிமையாளர் திரு.டிலஸ் அவர்களால் சுமார் 75 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
19-01-2016 சேவை மாலை 4 மணியளவில் மன்னார் பெரிய கடை பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும், பாஸ்டினி கொன்ஸ்ரக்சன் உரிமையாளர் திரு.டிலஸ், கிராம அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.மைக்கல்கொலின் மற்றும் பெரியகடை மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர், உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர். அத்தோடு அமைச்சரின் 42 ஆவது பிறந்த தின கொண்டாட்டத்தையும் மாதர் சங்கம் சார்பாக விமரிசயாக நடாத்தினார்கள், இவ் நிகழ்வோடு தனது பிறந்த நாளினையும் சிறப்பித்த கிராமத்து மக்களுக்கு அமைச்சர் டெனிஸ்வரன் தனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
32c792cd-39fb-45f6-8118-18c9d60000ea 171c1bac-017d-41bc-a159-45cd23e1c7cd 661c9248-f32a-4e45-bbdf-be1977ca11fb 789d9fdd-73bc-4895-a610-60ed40792c7b ba7e65ee-d20b-437d-bbcd-5bd3aaecefd9 e47b8c24-6368-412a-ac2e-416f5defc034
SHARE