வலிகாமம் இடம்பெயர் முகாமிற்கு ஆளுநர் தலைமையிலான குழுவினர் விஜயம்

301

வடமாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகள் தொடர்பிலும், முகாம்களில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளனர்.

அத்துடன், முகாம்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்ளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமது சொந்த காணிகளில் தம்மை மீள்குடியேற்றுமாறு வடமாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினரிடம் முகாம்களிலுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த குழுவில் வடமாகாண ஆளுநரின் செயலாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SHARE