வலுக்கட்டாயமாக குடியமர்த்தப்பட்டவர்களுக்கு வாக்குரிமை உள்ளது : மாவை

309

 

அரசாங்கத்தினால் வலுக்கட்டாயமாக குடியமர்த்தப்பட்டவர்கள் கூட இன்று வாக்குரிமை மற்றும் நில உரிமை உடையவர்களாக இருக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வட மாகாணத்தில் இன்றும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அதற்கு பாதுகாப்பு பிரிவினர் ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இன்றும் பல ஏக்கர் நிலப்பரப்புக்கள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

SHARE