தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வ/இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மூன்று மாணவர்கள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டி கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில், கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
A.Kavijeliny 1ம் இடத்தையும், A.M.Pawla Regina 2ம் இடத்தையும்,
R.Tharaniya 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் ஞா.ஜீவன் அவர்களுக்கும்,
வழிப்படுத்திய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர்கள் திருமதி.J.D.ரெஜினோல்ட் பெரேரா மற்றும் திருமதி.அ.சகிதரன் அவர்களுக்கும், பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி மரிய டெய்சி செபமாலை, பிரதி அதிபர் சின்னராசா சிறிரங்கநாதன் மற்றும் பாடசாலை சமூகத்தினருக்கும் தினப்புயல் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதேவேளை, தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வ/பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய மூன்று மாணவர்கள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டி கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
பி.மேரி அசெம்ரா 1ம் இடத்தையும், பா.கிசாளினி 3ம் இடத்தையும்,
பா.மதுசாளினி 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இவர்களை பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் ஞா.ஜீவன் அவர்களுக்கும், வழிப்படுத்திய பாடசாலையின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் கி.அம்பிகா அவர்களுக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும், தினப்புயல் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.