வலுவாகும் மஹிந்தவின் புதிய கட்சி – ஆதரிப்பதற்கு தயாராக இருக்கும் கட்சிகள்

247

mahinda-rajapaksa-new-party

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களால் அமைக்கவுள்ள புதிய கட்சிக்கு நாம் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என லங்கா சம சமாஜ கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய கட்சி நிச்சயமாக அமைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

புதிய கட்சி அமைக்கப்பட்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக்கு எதிரான கட்சிகள், மற்றும் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும் மஹிந்த ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சிக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்த்திருக்கும் நிலையில், தற்போது லங்கா சம சமாஜ கட்சி ஆதரவு செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும், புதிய கட்சியின் பெயர் ஐக்கிய மக்கள் முன்னணி என்றும் கட்சியின் சின்னம் வெண் தாமரை என்றும் கூட்டு எதிர்கட்சியின் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE