யாழ். பருத்தித்துறை வல்லிபுர ஆழ்வார் தேர் உற்சவத்தின் போது நகைத் திருட்டில் ஈடுபட்ட ஏழு பேர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகைத் திருட்டில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மூன்று இந்திய பிரஜைகளும் அடங்குவதாகவும் ஏனைய நால்வரும் சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது
திருட்டிற்கு பயன்படுத்திய வேன் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களால் திருடப்பட்ட 20 தங்க சங்கிலிகளும் 04 தங்கப் பென்டன்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.