வல்வெட்டித்துறை -தொண்டமானாறு பிரதேச பற்றைக் காட்டிலிருந்து 2 கிலோ 8கிராம் ஹெரோயின் பொதியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று முற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கடற்கரைக்கு அண்மையில் உள்ள பற்றைக் காட்டிலிருந்து இந்த ஹெரோயின் பொதியை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கடல் மார்க்கமாக குறித்த ஹெரோயின் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாகவும், குறித்த பகுதியில் மேலும் தேடுதல் நடவடிக்கையை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.