வழமை போன்று செயற்படும் கட்டுநாயக்க விமான நிலையம்!

242

katunayake-image-1

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள், சட்டப்படிவேலை இயக்கத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் அந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் முகாமைக்குஅறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானிகள் மத்தியில் மூச்சுப்பகுப்பாய்வு தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்கு முகாமை முடிவெடுத்தமையை ஆட்சேபித்தே விமானிகள் நேற்று இரவு முதல் தொழிற்சங்கநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிராங்போட்டில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று காலதாமதம் ஆவதற்கு விமானி ஒருவரின்குடிபோதை காரணமாக இருந்தது என்ற சம்பவத்தின் பின்னரே முகாமையின் அறிவிப்பு வெளியானது.

எனினும் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு விமானிகள் இணங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

கட்டுநாயக்க விமான நிலைய விமானிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக விமான பயணங்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என விமான நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வழமைப் போலவே விமான சேவைகள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமானிகள் மது அருந்தியுள்ளனரா என்பதை கண்டறிய முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சோதனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் விமானிகள் தமது தொழிற்சங்கத்துடன் ஒன்றிணைந்து மெதுவாக வேலை செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் விமான சேவைகளில் எவ்வித இடையூறுகளும் இன்றி வழமைப் போல் இடம்பெறுவதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இலங்கை விமான சேவையில் 10 தொடக்கம் 15 வீத விமானிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

SHARE