வவுனதீவு பகுதிக்கு படையெடுக்கும் யானைக் கூட்டம்: அச்சத்தில் மக்கள்

95

 

வவுனதீவு பகுதியில் யானைகள் கூட்டமாக படையெடுத்து வருவதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிக்கு வருகை தந்த காட்டு யானைக் கூட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, அப்பகுதியில், தற்போது வேளாண்மை அறுவடை இடம்பெற்று வருகின்ற நிலையில், இவ்வாறு காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வயல் நிலங்களுக்குள் ஊடுருவி நெற்பயிர்களையும் நாசம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அச்சம்
இதனால், வேளாண்மை அறுவடை காலங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் பொதுமக்களும் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே செயற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE