வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவரிற்கு கொழும்பு பிரதான வீதியில் காத்திருந்த சோகம்…!

200

மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் அவர்களை ஏற்றிச் சென்ற வாகன சாரதி ஆகிய மூவரும் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற, இவர்கள் பயணம் செய்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கென்டைனர் எனப்படும் கொள்கலன் பொருத்தப்பட்ட வாகனத்தின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளாகியதாகத் தெரிவி;க்கப்படுகின்றது.

இந்த விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாராகிய வவுனியா பொது வைத்தியசாலையின் டாக்டர் திருமதி கௌரிதேவி நந்தகுமார் (49) என்பவரும், அவருடைய பெறாமகளாகிய சிவதுர்க்கா சத்தியநாதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

மாகோ வைத்தியசாலையில் பொலிசாரினால் கையளிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரினதும் சடலங்களை குருணாகலை வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி சிவநாதன் படுகாயமடைந்து மாகோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு மரணமாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாகோ பொலிசார் மேல் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.vauneja01

vauneja02vauneja03

vauneja04

vauneja05

vauneja06

vauneja07

vauneja08

SHARE