வவுனியாவில்ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

137

வவுனியா கனகராஜன்குளம் பகுதியிலிருந்து நேற்று இரவு ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக கனகராஜன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வியடம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு 7 மணியளவில் கனகராஜன்குளம், மன்னகுளம் பகுதியில் வீதி ஓரத்தில் கைக்குண்டு, மகசீன் அதற்குரிய ரவைகள் 30 என்பன இருப்பதாக பொலிஸாருக்கு பொது மக்களினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அதனைப்பார்வையிட்டுள்ளதுடன் எவ்வாறு எங்கிருந்து கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அப்பகுதியில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகத் தெரிவித்துள்ளனர்.

SHARE