வவுனியாவில் அதிக பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த பல நாட்களாக அதிக பனிமூட்டம் காணப்படுவதுடன் கடும் குளிரான காலநிலையும் நீடித்துச் செல்கின்றது. இன்றைய தினம் காலை 9மணியாகியும் பிராதான வீதிகளில் அதிக பணிமூட்டம் காணப்பட்டது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் தமது கடமைகளுக்குச் செல்லும் வாகனச் சாரதிகள், அரச ஊழியர்கள், தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள், விவசாயிகள், தனியார் துறையினர் போன்ற பல்வேறு தரப்பினர் இன்றைய தினம் போக்குவரத்து பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.