வவுனியா பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஆயுதங்களுடன்
மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்தின் எஸ்.ஐ.குமார நலவன்ச தலமையில் ரோந்து சென்ற
போலிசாரே மேற்படி சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வவுனியா பொலிசார் தெரிவிக்கையில்
வவுனியா பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மூவரும்
பொலிசாரை பார்த்தவுடன் ஓட முற்பட்டவேளை பொலிசார் சந்தேக நபர்கள் பயணம்
செய்ததாக நம்பப்படும் பட்டா வாகனம் உட்பட 1 பிஸ்ரல், 1 நாட்டுத்துப்பாக்கி, 2
முகத்தை மூடி அணியும் மாஸ்க், மற்றும் 25000 ரூபா பணம் எனபவற்றை
கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இலங்கை
பூராவும் பல கொலை கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என்றும் கைது
செய்யப்பட்டவர்களில் ஒருவர் இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளி
என வவுனியா பொலிசார் தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த வவுனியா
பொலிசார் கொழும்பு, பதுளை, யாழ்ப்பாணம் பகுதிகளை சேர்ந்த மூன்று சந்தேக
நபர்களும் யாழ்ப்பாணத்தில் பிரபல வியாபாரி ஒருவரை கொலை செய்து
கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததாகவும் அது கைகூடாத நிலையில் வவுனியாவில் வைத்து கைது
செய்யப்பட்டதாகவும் இன்று (23-12-) நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள்
முன்னிறுத்தப்படுவார்கள் என வவுனியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கோவில்குளம் நிருபர்.