வவுனியாவில் ஆயுத வேட்டையில் பொலிசார்
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் ஆயுதங்கள்
இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று 04-11-2015 காலை
பொலிசார் மயானத்தில் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக
நபர் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து வவுனியா மற்றும் மானிப்பாய்
பொலிசார் இணைந்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவித்த பகுதிகளில்
பக்கோ கனகரக வாகனத்தின் உதவியுடன் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகித்த
இடங்களை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மூன்று இடங்களில்
பாரிய குழிகள் தோண்டப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போதும் எந்தவிதமான
ஆயுதங்களும் மீட்கப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.