வவுனியாவில் இலுப்பையடியில் இருக்கும் ஆறுமுகநாவலரின் சிலைக்கு அருகில்ஆறுமுகநாவலரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் தலைமையில் இன்று(05) காலை 8.30 மணிக்கு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் போது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ்மணி அகளங்கன் நினைவுரையினை வழங்கியதையடுத்து நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் நகர பிதா சந்திரகுலசிங்கம், வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தலைவர் தமிழ் மணி அகளங்கன், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ஆறுமுகநாவலரின் இவ்வுருவச் சிலை 04.04.1997 ஆம் ஆண்டு நகரசபைத் தலைவராக இருந்த ஜீ.ரி.லிங்கநாதனால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.