வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது ஏன்?

223

தமிழ் மக்கள் தமது நிகழ்வுகளின் போது பயன்படுத்தி வருகின்ற தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தமிழ் மொழி வாழ்த்து என்பன கலாசார பண்பாட்டு அடையாளம் இல்லையா என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன் வவுனியா மாவட்ட கலாசார பேரவை, வவுனியா மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த வவுனியா மாவட்ட கலை இலக்கிய கருத்தமர்வும் பண்பாட்டு பெருவிழாவும் நேற்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போதே தமிழ் தாய் வாழ்த்து மற்றும் தமிழ் மொழி வாழ்த்து என்பன புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு காலை 9 மணிக்கு மாவட்ட மட்ட நிகழ்வாக வவுனியா கலாசார மண்டபத்தில் ஆரம்பித்த நிலையில் தேசிய கொடி, மாகாண கொடி, மாவட்ட கொடி என எவையும் ஏற்படப்படவில்லை.

நிகழ்வில் தமிழ் மொழி வாழ்த்தோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தோ இடம்பெறவில்லை. இவை குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்மை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தம் அவர்களிடம் கேட்ட போது,

இது மாவட்ட மட்ட நிகழ்வு. இங்கு மூவின மக்களும் வாழ்கிறார்கள். அதனால் தமிழ் தாய் வாழ்த்தை மட்டும் பாட முடியாது.

இது தவிர இந்த நிகழ்வு கலை இலக்கிய நிகழ்வோ அல்லது தமிழ் இலக்கிய நிகழ்வோ இல்லை.

இது ஒரு பண்பாட்டு நிகழ்வு. இதனால் தான் அவை பாடப்படவில்லை என கூறியுள்ளார்.

இது தொடர்பில் கலைஞர்கள் சிலரிடம் கேட்ட போது, தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு அடையாளங்களில் தமிழ் மொழி வாழ்த்து மற்றும் தமிழ் தாய் வாழ்த்து உள்ளன.

இதனை பாடியிருக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளார்களோ அந்த இனத்தின் அடையாளத்தை பயன்படுத்துவதில் தப்பில்லை.

அதுபோல் ஏனைய இனத்தவரின் பண்பாட்டு அடையாளத்தையும் பயன்படுத்தலாம் தானே. அதற்கு எவரும் எதிர்ப்பு காட்டவில்லேயே என்றனர்.

இதேவேளை, இப்பாண்பாட்டு விழாவிற்கு கலைஞர்கள் பலருக்கும் அறிவிக்கப்படவில்லை என பலரும் குற்றம்சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-6 625-0-560-320-160-600-053-800-668-160-90-7 625-0-560-320-160-600-053-800-668-160-90-8 625-0-560-320-160-600-053-800-668-160-90-9

SHARE