வவுனியா வைத்தியசாலையில் இன்புளுவென்சா ஏ நோய்த்தாக்கம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவரிடம் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தேசிய நோய் தடுப்பு பிரிவு மற்றும் தேசிய ஆராய்ச்சி மையத்தினது அறிக்கைகள் குறித்த மூவரும் இன்புளுவன்சா ஏ என்ற வைரசின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
அத்தோடு, இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சுக்கும், மாகாண சுகாதார அமைச்சுக்கும் அறிவித்துள்ளோம்.
அதனடிப்படையில் அவர்கள் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொழும்பில் இருந்து இந்த நோய் தொடர்பான இரு வைத்திய நிபுணர்களை அனுப்பிவைத்துள்ளார்கள். அவர்கள் இந்த நோய் தொடர்பாக தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
இந்த நிலையில், சிறுவர்கள், வயோதிபர்கள், கர்ப்பிணிகள் இந்த நோய்த்தாக்கத்திற்கு இலகுவில் உள்ளாகக்கூடியவர்கள் இவர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
தேவையில்லாது வைத்தியசாலை மற்றும் சனநெரிசல் மிக்க இடங்களுக்குச் செல்வதை தவிர்க வேண்டும். இந்த நோய் சுவாசம் வளியாகவே பரவக் கூடியது. அதனால் வேகமாக பரவும் தன்மை கொண்டது.
அத்துடன் சளி, காய்ச்சல், தும்மல் என்பனவும் தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மேல் இடைவிடாத இருமல், உடற்சோர்வான அறிகுறிகள் காணப்படும் இடத்து உடனடியாக வைத்தியசாலையை நாடவேண்டும் எனவும் தெரிவித்தார்.