வவுனியாவில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கண்காட்சி நிகழ்வு
வன்னியில் பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவை
முன்னிட்டு வவுனியா நகரசபை மைதானத்தில் இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் கலை
மற்றும் கண்டுபிடிப்பு கண்காட்சி நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வை வடமாகாண ஆழுனர் எச். எம்.டி.எஸ்.
பள்ளியக்கார மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
ராணுவ வீரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கண்டு பிடிப்புக்கள்
இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று தொடக்கம் தொடர்ந்து மூன்று
நாட்கள் இந்நிகழ்வு நடத்தப்படும் என இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.