வவுனியாவில் இலங்கை வங்கியின் துணை நிறுவனமான ‘பிரயாண முகவர் நிறுவனம்’ திறந்து வைப்பு

190
வவுனியாவில் இலங்கை வங்கியின் துணை நிறுவனமான ‘பிரயாண முகவர் நிறுவனம்’ (பி.ஓ.சி, ரவல்ஸ்) இன்று (28)  நிறுவனத்தின் தலைவர் மித்திர பரணவிதான தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன கலந்துகொண்டு இலங்கை வங்கியின் பிரயாண முகவர் நிறுவனத்தை திறந்து வைத்தார்.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கெ.அகிலேந்திரன் இலங்கை வங்கியின் துணை நிறுவனமான பிரயாண முகவர் நிறுவனத்தின் ஆறாவது கிளை திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.
வவுனியா கண்டி வீதியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்நிறுவனத்தின் நிகழ்வில் இலங்கை வங்கியின் ‘பிரயாண முகவர் நிறுவனத்தின்’ பொது முகாமையாளர் ரமேஸ் சமரநாயக்க, செயற்பாட்டு முகாமையாளர் காசன் மங்களகம ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
SHARE