பெண்ணொருவரது முறைப்பாட்டின் அடிப்படையில் இக்கைது நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் கைதுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.
வவுனியாவில் தளமாகக்கொண்டு இயங்கிவரும் tnn.lk இன் உரிமையாளரும், ஊடகவியலாளருமான பரமேஸ்வரன் கார்த்தீபன் என்பவர் காலை 6.30 மணியளவில் வவுனியா பொலிசாரினால் கைது செய்யப்பட்டார். இவருடைய தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டதாகவும் இதற்கும் சிறி ரெலோ கட்சிக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என்று குறித்த பரமேஸ்வரன் கார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் விடுகின்ற செய்திகளினால் பாதிக்கப்பட்டதன் விளைவாகவே இவர் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே இதனை கருத முடிகிறது. இவ்விடயம் தொடர்பாக குறித்த பெண் அவரிடம் ஒப்புதல் வாக்குமூலத்தை கேட்டபோது பின்னர் தருவதாக கூறியுள்ளார். குறித்த பெண் யார் ? கார்த்திக் அவர்களுக்கும் என்ன தொடர்பு என்பது பற்றி குறித்த பெண்ணின் ஒப்புதல் வாக்குமூலத்தின் பின்னரே கைது தொடர்பான விபரம் வெளியில் வரும். இவர் தற்போது பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பரமேஸ்வரன் கார்த்தீபன் வவுனியா இணைய சங்கத்தின் அங்கத்தவர். ஊடகவியலாளராக யார் பணி புரிந்தாலும் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதை பொலிசாரிடம் சென்று விசாரித்திருக்கவேண்டும். யுத்த காலத்தில் மட்டும் 35 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்கள். 50க்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள ஊடகவியலாளர்கள் அரசியல் தஞசம் அடைந்துள்ளனர். பிழை சரிக்கு அப்பால் குறித்த ஊடகவியலாளர்கள் தொடர்பில் பொலிசாரிடம் விசாரித்து அதற்கான நடவடிக்கைகளை ஊடக சங்கங்கள் மேற்கொண்டிருக்கவேண்டும். இதுவே ஊடக தர்மம். ஒரு தரப்பு வாதத்தை வைத்துக்கொண்டு ஊடகவியலாளர்கள் செயற்படக்கூடாது. நடந்த சம்பவத்தின் உண்மை சம்பவம் இரு தரப்பினரிடத்திலும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டு நாளை மறு தினம் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.