வவுனியா பழையவாடி வீதி, புளியங்குளம் பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது இன்று(03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
திடீரென வீட்டிற்குள் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டிலிருந்த 10 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மோப்ப நாயினை பயன்படுத்தி மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.