வவுனியாவில் குடும்பப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

359

வவுனியாவில் குடும்பப்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் நேற்று

(24.07.2015) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும்

தெரியவருவதாவது.

பிரேம ராதிகா வயது 25 என்ற 4 வயது குழந்தை ஒன்றின் தாயாரான குடும்பப் பெண்ணே

இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இறுதியாக இவர் கட்டாரில் இருக்கும் கணவரிடம் தொலைபேசியில் உரையாடியதன் பின்னர் மாலை

4.30 மணியளவில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த நாட்கு

நாட்களாக கணவனுடன் முரண்பட்டதாகவும் குடும்பதகராறு தான் இத்தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிஷோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

unnamed (39) unnamed (40)  unnamed (42)

SHARE