வவுனியாவில் குழு மோதல்

143

வவுனியா மகாரம்பைக்குளத்தில் நேற்றிரவு 8.30மணியளவில் இடம்பெற்ற குழு மோதலில் மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் கண்ணாடி போத்தல் போன்ற வெவ்வேறு பொருட்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இவ் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் 17,19,25 வயதுடைய மூன்று இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் மேலதிக விசாரணைகளை மகாறம்பைக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE