வவுனியாவில்  கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் கண்காட்சி.

266

கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வட மாகாண கைத்தொழில் கண்காட்சி நேற்று வவுனியாவில் ஆரம்பமானது.

வட மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இக் கண்காட்சி மூன்று நாட்களுக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டப வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-14

இந்த நிலையில் நேற்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வட மாகாண போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

வட மாகாணத்தில் உள்ள கைத்தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகள் இதன்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன் விற்பனையும் செய்யப்பட்டிருந்தது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-15

இந் நிகழ்வுக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண போக்குவரத்து மற்றும் கிராமிய அமைச்சர் பா.டெனிஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இந்திரராசா, செ.மயூரன், ஏ.ஜெயதிலக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார உட்பட திணைக்கள தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-16 625-0-560-320-160-600-053-800-668-160-90-17

 

 

SHARE