வவுனியாவில் சிங்கள அரசாங்க அதிபர் நியமணம் தொடர்பில் 2015 ல் மறுபரீசிலனை செய்யவேண்டும் என கூறிய அரசியல்வாதிகள் தற்போது நாக்கு வளிப்பது ஏன்?

321

சிவசக்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஆர்.இந்திரரசா, எம்.பி.நடராசா ஆகியோரும் தமிழரசுக் கட்சியின் சார்பில் வடமாகண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

width=”512″ height=”288″ data-highest-encountered-width=”936″ />

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வவுனியா மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்திற்கு அளித்துவரும் நல்லெண்ண அடிப்படையிலான ஆதரவை கூட்டமைப்பின் தலைமைகள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என கோரியிருக்கின்றனர்.

வவுனியா சுவர்க்கா தங்ககத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்த அவர்கள், இது தொடர்பில் கூட்டு அறிக்கையொன்றையும் வெளியிட்டிருக்கின்றனர்.

கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றாகிய ஈழ மக்கள் புரட்சிகரன முன்னணியின் சார்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஆர்.இந்திரரசா, எம்.பி.நடராசா ஆகியோரும் தமிழரசுக் கட்சியின் சார்பில் வடமாகண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

முரண்பாட்டுக்கும் சர்ச்சைக்குமுரிய வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் நியமனம் தொடர்பில் தாங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் ஆகியோரை சந்தித்து, தமது ஆட்சேபனையையும் நியாயங்களையும் எடுத்துக்கூறிய போது, தமிழர் ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதாக உத்தரவாதம் அளித்த பின்னர், மறுபடியும் சிங்கள மொழி பேசும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளமையானது, ஜனாதிபதி தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், வாக்களித்த தமிழ் மக்களையும் ஏமாற்றும் ஒரு நடவடிக்கையாகவே தம்மால் பார்க்க முடிகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

சிவசக்தி ஆனந்தன், டாக்டர் சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஆர்.இந்திரரசா, எம்.பி.நடராசா ஆகியோரும் தமிழரசுக் கட்சியின் சார்பில் வடமாகண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சத்தியலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

ஓர் அரசாங்க அதிபர் நியமனமாகிய சிறிய விடயத்திலேயே நியாயமான தமது கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்போது, ஏனைய விடயங்களில் சாதகமான முடிவுகள் அரசாங்கத்திடம் இருந்து வரும் என்று பொறுமையுடன் தாங்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், தமிழ் மக்களையும் இந்த அரசாங்கமும் முந்தைய அரசாங்கத்தைப்போலவே ஏமாற்றி வருவதாகவே கருதுவதாகவும் அவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.

ஆகவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைகள் அரசாங்கத்திற்கு அளித்து வரும் நிபந்தனையற்ற ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நல்லாட்சி என்று கூறும் இவர்கள் ஒரு தமிழனை ஏன் நியமிக்க முயற்சி எடுக்கவில்லை ?நக்கினார் நாவிளந்தார் என்ற பழமொழி இவர்களுக்கு பொருந்துமோ?

SHARE