வவுனியா – நெடுங்கேணி சன்னாசிப்பரந்தன் பாலத்தில் பிறாடோ வாகனம் ஒன்று வீதியைவிட்டு விலகி பள்ளத்திற்குள் பாய்ந்து இன்று காலை விபத்துள்குள்ளாகி உள்ளது.
சினிமா பாணியில் இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
நேற்று இரவு கொழும்பிலிருந்து வைத்தியர் ஒருவரை முல்லைத்தீவில் இறக்கிவிட்டு இன்று அதிகாலை கொழும்பு திரும்பும்போது நெடுங்கேணி சன்னாசிப்பரந்தன் பாலத்தில் வாகனம் வீதியைவிட்டு விலகி பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்துள்குள்ளாகி உள்ளது.
இதேவேளை, சாரதியின் நித்திரையே இவ்விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.