வவுனியாவில் சுகாதார சீர்கேடு காரணமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றிற்கு நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் பல வருடமாக இயங்கிவரும் வெதுப்பக உற்பத்தி நிலையத்தில்; சுகாதார சீர் கேடான முறையில் உற்பத்திப் பொருட்களை தயாரித்து விநியோகம் செய்து வருவதாகவும், தூய்மை இன்மை, ஆபத்தை தருவிக்கக்கூடிய வகையில், தூசிபடிதல் போன்ற சுகாதார சீர் கேட்டினை கருத்தில் கொண்ட வவுனியா சுகாதார பொதுப் பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது உரிமையாளருக்கு எதிராக நேற்றைய தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியபோது குறித்த வெதுப்பக உற்பத்தி நிலையத்திற்கு சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வெதுப்பகம் கடந்த 2013ஆம் ஆண்டும் பொது சுகாதார பரிசோதகர்களினால் சுகாதாரம் அற்ற முறையில் வெதுப்பக உற்பத்தி தயாரிப்புக்களை மேற்கொண்டதாக தெரிவித்தும், சுகாதார சீர் கேடுகள் இடம்பெறுவதை அடுத்து நீதி மன்றத்தால் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.