வவுனியாவில் 10 வயது சிறுவன் கழுத்து வெட்டி கொலை
வவுனியாவில் இன்று 10 வயதுடைய சிறுவன் கழுத்து வெட்டப்பட்டு கொலை
செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
தாயார் சிறுவனை காணவில்லை என தேடியபோதே சிறுவனின் சடலம் வீட்டின்
பின்புறம் கழுத்து வெட்டப்பட்டு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (9.4) மாலை மீட்கப்பட்ட இச் சடலம் 10 வயதுடைய சந்திரசேகரன் சஞ்சய் என
அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சிறுவன் எவ்வாறு கொலை செய்யப்பட்டான் என்பது
தொடர்பில் விசாரணைகளை வவுனியா பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.
இதேவேளை இச் சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள
நிலையில் பாசாலையில் வகுப்புகளை நிறைவு செய்து வந்தபின்னர் தாயார்
உணவை வழங்கி விட்டு அருகில் உள்ள வீட்டிற்கு 6 வயதுடைய குழந்தையுடன் சென்ற
சமயமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை வீட்டின் பின்புறமிருந்த சடலத்தை உறவினர்கள் தூக்கிவந்து வீட்டிற்குள்
வைத்திருந்தனர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனைக்காக சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில்
ஒப்படைக்கப்பட்டுள்ளது