வவுனியாவில் திருடப்பட்ட நகைகள் மீட்பு: திருடன் தப்பி ஓட்டம்

210

வவுனியா மத்திய பேருந்து நிலையப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை திருடப்பட்ட நகைகள் வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் தப்பி ஓடியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் மது, போதைவஸ்து தடுப்பு பிரிவு பொலிஸார் கடமையில் இருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற ஒருவரது கைப்பையை சோதனை செய்ய முயன்ற போது குறித்த நபர் கைப்பையை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

அந்த கைப்பையை மீட்ட பொலிஸார் சோதனை செய்த போது அதில் காப்பு, தோடு, மோதிரம் உள்ளடங்கிய சுமார் 3 பவுண் நகை காணப்பட்டுள்ளன.

அதனை மீட்ட மது போதைவஸ்து தடுப்பு பிரிவு பொலிஸார் அதனை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE