வவுனியாவில் நாட்டுப்பற்றாளரும், ஊடகவியலாளருமான ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாளும் அஞ்சலிக் கூட்டமும்

160

நாட்டுப்பற்றாளரும், ஊடகவியலாளருமான ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாளும் அஞ்சலிக் கூட்டமும் 06.06.2018 (புதன் கிழமை) அதாவது இன்றையதினம் வாடி வீடு, புகையிரத நிலைய வீதி, வவுனியாவில் பிற்பகல் 4.30 மணிக்கு வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்விற்கு அரசியல் பிரமுகர்கள், ஊடக நண்பர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஐயாத்துரை நடேசன் இலங்கையின் முன்னோடி தமிழ் ஊடகவியலாளர் ஆவார். இவர் 2004 மே 31 அன்று மட்டக்களப்பு நகரில் வேலைக்கு செல்லும் வழியில் இலங்கை இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் கருணா குழுவைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் ஆயுதம் தாங்கியவர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த இவர் நெல்லை நடேசன் என்ற பெயரில் எழுதி வந்தார். இறக்கும் போது இவர் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் துணைத்தலைவராக பணியாற்றினார். மேலும் இவர் சக்தி தொலைக்காட்சியின் மட்டக்களப்பு நிருபராகவும், வீரகேசரி நாளேட்டின் எழுத்தாளராகவும்,  ஐ.பி.சி  நிறுவனத்துக்கான இலங்கை நிருபராகவும், தினக்கதிர் பத்திரிகையின் ஊடகவியலாளராகவும் பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

SHARE