வவுனியாவில் கடன் கொடுக்கும் நுண்நிதி நிறுவனங்களை மூடுமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று(17) காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் ஒன்று கூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட பெண்கள் கருத்துத் தெரிவிக்கையில், கிழமைகளில் பெறப்படும் கடன்களினால் தமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாகவும், அதனால் துர்ப்பாக்கிய நிலையில் தாம் வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை அரசாங்கம் மற்றும் வடமாகாணசபை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டியுள்ளனர்.
அத்தோடு “நுண் நிதிக் கடன் ஒரு தூக்குக்கயிறு”, “யுத்தத்தில் துப்பாக்கி நல்லாட்சியில் நுண் கடன்”, “கடன் கொடுத்து பட்டினி போடாதே”போன்ற வாசகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்கள். குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.