வவுனியாவில் போதைப்பொருள் வைத்திருந்த இரு இளைஞர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா சிறைச்சாலை வளாகத்திற்கு அண்மையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியபோதே குறித்த இரு இளைஞர்களை வவுனியா பொலிஸ் நிலைய போதை தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 20 கிராம் கெரோயின் மீட்க்கப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியாவை சேர்ந்தவர்கள் என்றும் சிறைச்சாலைக்குவெளியில் நின்று சிறைச்சாலை மதிலால் சிறைக்குள் போதைபொருட்களை எறிய முயற்சித்த போதேகைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா நீதி மன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.