வவுனியாவில் போதை பொருள் பாவனைக்கு எதிரான வாரத்தை முன்னிட்டு ஊர்வலம்
போதைப்பொருள் பாவனையற்ற இலங்கையை உருவாக்குவோம் என்னும்
வவுனியாவில் போதை பொருள் பாவனைக்கு எதிரான வாரத்தை முன்னிட்டு ஊர்வலம்
Posted by Thinappuyalnews on Thursday, June 4, 2015
தொனிப்பொருளில் இன்று 04-06-2015 போதை பொருள் பாவனைக்கு எதிரான
வாரத்தை முன்னிட்டு வவுனியா பிரதேச செயலகம் மற்றும் ஜக்கிய அபிவிருத்தி
நிதியத்தின் ஏற்பாட்டில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திலிருந்து
வவுனியா மாவட்ட செயலகம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.
விழிப்புணர்வு பேரணியை தொடர்ந்து மதுவிற்பனை நிலையங்கள்
கள்ளுத்தவரணைகளுக்கான அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் காலங்களில் வழங்காமல்
தடுப்பதோடு தற்போது வரை வழங்கப்பட்டவற்றை மீழ் பரிசீலனை செய்தல்,
வேறு மாவட்டத்தில் மது விற்பனை அனுமதிப்பத்திரத்தினை பெற்று எங்களது
மாவட்டத்தில் மது விற்பனையை மேற்கொள்பவர்கள் குறித்து தகுந்த நடவடிக்கை எடுத்தல்,
ஆலயங்கள் பாடசாலைகளுக்கு அருகாமையில் கள்ளுத்தவறணைகள் மதுச்சாலைகள் போதைவஸ்து
நிலையங்கள் காணப்படுவதனால் அவற்றை அகற்ற சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல்,
21 வயதுக்கு குறைந்த மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை அவதானிக்க முடிகிறது எனவே
இவர்களை ஊக்கப்படுத்துபவர்களுக்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்தல்,
மதுபான சாலைகள் கள்ளுத்தவறனைகள் திறந்திருக்கும் கால எல்லையை வரையறை செய்தல்,
வீதியோரங்கள் பொது இடங்களில் மதுபாவனையை தடுத்தல்,
போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் குடும்ப வன்முறைகளை முன்னுரிமைப்படுத்தி
அணுகுதலும் அவற்றிற்கான நிரந்தர தீர்வைபெற்றுக்கொடுத்தலும்.
போன்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று வவுனியா மேலதிக அரச அதிபர்
திருமதி மோ.சரஸ்வதி அவர்களிடம் வவுனியா மாவட்டத்தில் போதை பொருள்
பாவனைக்கு எதிரான செயற்ப்பாட்டினை விரைவுபடுத்துமாறும் கையளிக்கப்பட்டது. இதனை
தொடர்ந்து போதை பொருள் பாவனையை தடுக்கும்; நோக்கில் விழிப்புணர்வு
இப்பேரணியில் பிரதேச செயலக ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பொது
மக்கள், பொது அமைப்புகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.