வவுனியாவில் மர்மமான முறையில் குழந்தை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

186

வவுனியாவில் மர்மமான முறையில் குழந்தை கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2 மணியளவில் வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் பிள்ளையை கடத்தியுள்ளது.

வவுனியா குட்செட் வீதி ஒழுங்கையில் உள்ள வீட்டில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண் குழந்தையான வானிஷன் இனந்தெரியாத நபர்களால்  கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருகிறார். தாயிற்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என குழந்தையின் தாயார் குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் முழுமையாக இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலதிக விசாரனைகள் பொலிசாரினால் தொடர்கின்றது.

SHARE