வவுனியா குளத்தின் அலை கரைப்பகுதியில் இருந்து முதியவர் ஒருவரது சடலம் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், வவுனியா பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய அந்தோனி மயில்வாகனம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் உயிரிழப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.