வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு

395

 

வவுனியாவில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித்தொகை வழங்கும்

நிகழ்வு

யுத்தம் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக முள்ளந்தண்டு வடம்

பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்த உதவித் தொகை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று

23-04-2015 வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள முள்ளந்தண்டு

பாதிக்கப்பட்டவர்களுக்கான பராமரிப்பு நிலையமான வைகறையில் இதன் ஆரம்ப

நிகழ்வு இடம்பெற்றது. unnamed (1)  unnamed (3) unnamed

 

அதன்மூலம், வடமாகாண சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் உள்ள

200 முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்த உதவித் தொகை

வழங்கப்படவுள்ளது

unnamed (2)

முதற்கட்டமாக இன்று 40 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. இதில் இடுப்புக்குக்

கீழ் இயங்க முடியாதவர்களுக்கு 1500 ரூபாவும், கழுத்துக்கு கீழ் இயங்க

முடியாதவர்களுக்கு மூவாயிரம் ரூபாவும் மாதாந்தம் வழங்கப்படவுள்ளது.

இந்த ஆரம்ப நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்

வினோநோதராதலிங்கம், வடமாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சமூகசேவைகள்,

புனர்வாழ்வளித்தல், சிறுவர் பராமரிப்பு சேவைகள் மற்றும் மகளிர் விவகார

அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான அன்ரனி

ஜெகநாதன், எம்.பி.நடராஜா, ம.தியாகராஜா, வடமாகாண சுகாதார சேவைகள்

பணிப்பாளர் திருமதி இன்பராஜ், பிராந்திய வைத்திய அதிகாரி மகேந்திரன்,

பிரதேச செயலாளர் கா.உதயராசா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரை நிகழ்த்திய வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் இந்த வைகறை

நிலையமானது 2014 ஜனவரி 17 ஆம் திகதி வடமாகாண முதலமைச்சர் சி.வி.

விக்கினேஸ்வரன் ஜயா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என குறிப்பிட்ட அவர்

அவுஸ்ரேலியாவிலிருந்து பணத்தை முதலமைச்சர் நிதியத்தின் ஊடாக வைகறை

நிலையத்திற்கு எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது முன்னைய ஆளுனர்

முதலமைச்சர் நிதியம் ஒன்றை தொடங்க முடியாது என்று எழுத்து மூலமாக எங்களுக்கு

அறிவித்திருந்தார் என தெரிவித்த அவர் இருந்தபோதும் வடமாகாண சுகாதார

அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து வைகறை நிலையத்தை ஆரம்பித்ததாக

தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிறுவப்பட்ட

ஒரே நிலையம் வைகறை நிலையம் மாத்திரமே என குறிப்பிட்ட அவர் 112

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் வைகறை நிலையத்தில் அவர்களுக்கான

பயிற்சிகளை பெற்றிருப்பதாக தெரிவித்தார். 200 முள்ளந்தண்டு வடம்

பாதிக்கப்பட்டவர்களும் மாதாந்தம் அஞ்சல் அலுவலகத்தினுடாக பணத்தை

பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்த அவர் இலங்கையிலேயே முள்ளந்தண்டு வடம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் மாகாணம் வடமாகாணம் மாத்திரமே என

சுட்டிக்காட்டினார்.கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான ஒரு முயற்சி

எடுக்கப்பட்டபோதும் அம் மாகாணத்தின் ஆளுனரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக

தெரிவித்த அவர் எதிர்காலத்தில் மாகாணசபை இந்த உதவித் தொகையை கூட்டுவதற்கு நடவடிக்கை

எடுக்கும் என உறுதியளித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்

வடமாகாணத்தில் 42000 விசேட தேவைக்குட்பட்டோர் இருப்பதாக தெரிவித்த அவர்

அவர்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என

சுட்டிக்காட்டினார். தொடர்ந்து உரை நிகழ்த்திய வடமாகாண சுகாதார அமைச்சர்

சத்தியலிங்கம் வடமாகாண சபையால் 1400 மில்லியன் ரூபா செலவில்

மாங்குளத்தில் புனர்வாழ்வு வைத்தியசாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிட்ட

அவர் புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் வடமாகாணசபையும் 100

நாள் வேலைத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தது என குறிப்பிட்டார்.

இப்போது மத்தியில் இருக்கின்ற அரசாங்கம் ஸ்திரமான அரசாக இல்லை என

குறிப்பிட்ட அவர் பாராளுமன்றம் வெகுவிரைவில் கலைக்கப்பட கூடிய நிலை இருப்பதாக

சுட்டிக்காட்டினார். இந்த சர்ந்தர்ப்பத்தை பயன்படுத்தி தேசிய கட்சிகள் தங்களுக்குள்

பிளவுகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என தெரிவித்த

அவர் வட கிழக்கு மாகாணங்களில் ஆதரவு இல்லாத கட்சிகள் இப்போது இங்கு ஆதரவு

தேடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.மத்திய அரசின்

அதிகாரிகள் வடமாகாண சபைக்கு அறிவிக்காமல் அரசியல்வாதிகளின் அரசியல்

இலாபங்களுக்காக செயற்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

SHARE