வவுனியாவில் வடமாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களினால் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சர்வதேச மகளின் தினத்தினை நியுசிலியஸ் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்தனர் காலையிலிருந்து மாலை 3மணிவரையும் இடம்பெற்ற நிகழ்வில் மகளிருக்கான விளையாட்டு நிகழ்வுகள், அழகு கலை, சுயதொழில் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சி கலை நிகழ்வுகள், என பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். வவுனியா மாவட்ட மேலதிக செயலாளர், பாடசாலை அதிபர்கள், அரச அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். படங்களும் தகவலும் :- காந்தன்