வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாகியுள்ளது.
வாகனங்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நிலையமொன்றிலேயே தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.