வவுனியாவில் வழங்கப்பட்ட திட்டங்களை பார்வையிட்டார் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்…

324
வவுனியாவில் வழங்கப்பட்ட திட்டங்களை பார்வையிட்டார் வடக்கு அமைச்சர் டெனிஸ்வரன்…
வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் வடக்கு மாகாணம் முழுவதும் பேரூந்து நிறுத்தகங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்ட மாகாண சபையின் உறுப்பினர் ஏ.ஜெயதிலக அவர்களது வேண்டுகோளுக்கிணங்க வவுனியா இரட்டைபெரியகுளத்தில் உள்ள பரக்கும் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பேரூந்து நிறுத்தகத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவுற்ற நிலையில் உறுப்பினரது அழைப்பிலே 25-07-2016 திங்கள் மாலை 3.30 மணியளவில் அதனை பாரவையிட்டார் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், குறித்த பேரூந்து நிறுத்தகத்தை குறுகிய காலத்திற்குள் கட்டி முடித்த ஒப்பந்த காரர்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, விரைவில் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு மாணவர்களது பாவனைக்கு வழங்கப்படும் என்றும்  அமைச்சர் தெரிவித்தார்.
அதே வேளை யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு முன்பாகவும் மாணவர்களது நலன் கருதி அமைக்கப்படும் பேரூந்து நிறுத்தகமும் விரைவில் மீதி வேலைகள் பூர்த்தியாக்கப்பட்டு, மாணவர்களது பாவனைக்கு ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
SHARE