வவுனியா பூங்கா வீதியில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக அமைந்திருந்த விசேட அதிரடிப்படை முகாம் இன்று 31-03-2016 உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டது.
இம்முகாமானது நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான நெல் களஞ்சியசாலையில் இயங்கி வந்ததுடன் மக்கள் குடியிருப்பு மற்றும் நகரசபைக்கு சொந்தமான சிறுவர்பூங்கா ஆகிய பகுதிகளுக்கு மத்தியில் அமைந்திருந்தது.
இவ் அதிரடிப்படை முகாம் விடுவிக்கப்பட்டதானது விவசாயிகளின் நெல் கொள்வனவு மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.