விபத்துக்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நேற்று 13-10-2016 வவுனியா பொலிசாரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில் பாடசாலை மாணவர்களுக்கான விபத்தை தவிர்ப்பது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டதுடன், வவுனியா நகர வீதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விபத்து தவிர்க்கும் செய்முறை விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது.
இந் நிகழ்வானது வன்னி மாவட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்கோணின் வழிகாட்டலில் வவுனியா மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வஜிய முனி தலைமையில் நடைபெற்றதுடன் நிகழ்வினை போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் நெறிப்படுத்தியிருந்நதமை குறிப்பிடத்தக்கது.
























