வவுனியா பொது வைத்தியசாலை வளாகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (01-03-2016) வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் க.அகிலேந்திரன் தலமையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கத்தால் அடிக்கல் நாட்டி சம்பிராதய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் க.அகிலேந்திரன்
இதயம் சம்பந்தமான நோய்களுக்கு பணம் படைத்தவர்கள் கொழும்பு மற்றும் கண்டி போன்ற வைத்தியசாலைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். வறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்;த மக்களுக்காக வவுனியா வைத்தியசாலையில் இருதய நோய் சம்பந்தமான அலகு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். அவ் வேலைத்திட்டத்திற்கு சுகாதார அமைச்சு அனுமதி அளித்துள்ள போதும் நிதி ஒதுக்கீட்டில் பிரச்சனைகள் உள்ளது. ஆகவே வடமாகாண சுகாதர அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினரும் இணைந்து தேசிய மட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டு வவுனியா மக்களுக்கு சுகாதார சேவையில் பங்களிப்பை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாணசபை சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம்
வடக்குமாகாணத்தில் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகமாக காணப்படுகிறது. யாழ்ப்பாணம் தவிர்ந்த நாலு மாவட்டங்களில் இருக்கின்ற பொது வைத்தியசாலைகளிலும் மற்றும் தள வைத்தியசாலைகளிலும் விபத:தப்பிரிவுகள் உருவாக்கப்படும். அத்துடன் வவுனியா பொதுவைத்திசாலை மாகாண வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கை மாகாணசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.பி.நடராசா, எஸ்.தியாகராசா, பி.எம்.ஜெயதிலக மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்துகொண்டனர்.