வவுனியாவில் வீரமக்கள் தினம் இறுதிநாள் நிகழ்வு
கடந்த 30 வருட ஆயுத போராட்டத்தில் உயிர்நீத்த தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்
போராளிகள் பொதுமக்கள் ஆதரவாளர்களின் நினைவாக தொடர்ந்து நான்கு
நாட்களாக அனுஸ்டிக்கப்பட்டு வந்த 26 வது வீரமக்கள் தினத்தின் இறுதி நாள்
நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை 16-07-2015 மாலை 4.30 மணியளவில்
கோவில் குளத்தில் அமைந்துள்ள அமரர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில்
நடைபெற்றது.