வவுனியாவில் 3ஆவது நாளாக கடும் பனிமூட்டம்

218

வவுனியாவில் இன்று 3ஆவது நாளாக கடும் பனிமூட்டம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து கடும் பனிப்பொழிவு காணப்படுவதுடன் குளிரான காலநிலையும் நிலவுகின்றது.

இதன் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளதுடன் ஏ9 வீதியும் பனிமூட்டமாக காட்சியளித்துள்ளது.

பனிமூட்டத்தால் காலை நேரங்களில் இவ்வீதி வழியாக பயணங்களை மேற்கொள்ளும் வாகனங்களின் சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் ஆகியோரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

 

 

 

SHARE