வவுனியாவில் 455வது பொலிஸ் நிலையம் திறந்துவைப்பு!!
வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையம் இன்று (15.10.2016) காலை 9.30 மணியளவில் இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் வடமாகணசபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப்படையினர் , பொதுமக்கள்,பிரதேச மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
இந் நிகழ்வில் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றதுடன், புதிதாக அமைக்கப்பட்ட ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தினையும் இலங்கை பொலிஸ்மா அதிபர் பார்வையிட்டார்
இவ் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையமானது கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 வரை பொலிஸ் அரணாக காணப்பட்டது. இன்று (15.10.2016) முதல் பொலிஸ் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது
இப் பொலிஸ் நிலையத்தின் கீழ் 4 கிராம சேவையாளர் பிரிவுகளில் 11482 மக்கள் வசித்து வருகின்றனர்
இதேவேளை இன்று 12 மணியளவில் வவுனியா போகஸ்வவையிலும் பொலிஸ்நிலையம் ஒன்று திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது